ஹைதராபாத் அணியின் தோல்விக்கு என்ன காரணம்?
2024- ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் கோப்பையைக் கைப்பற்றி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன் கோப்பையை வென்று அசத்தியது.
சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிப் போட்டி நேற்று (மே 26) இரவு 07.30 மணிக்கு நடைபெற்றது. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வுச் செய்து விளையாடியது. தொடக்க வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, 18.3 ஓவர்களில் 113 ரன்களை மட்டுமே எடுத்தது. 114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10.3 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 114 ரன்களை எடுத்து, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றியது.
கொல்கத்தா அணியின் பந்து வீச்சாளர் ஸ்டார்க், ஹர்ஷித் ராணா, ரசல் சுனில் ஆகியோரின் அதிரடி பந்து வீச்சால், ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்கள் அபிஷேக் சர்மா, டிராவிஸ், ராகுல் திரிபாதி, மார்க்ரம், கிளாசன் ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க பின்னால் வந்த வீரர்கள், நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதனாலே குறைந்த அளவு ரன்களே அந்த அணியால் குவிக்க முயன்றது.
ஒருவேளை 200 ரன்களைத் தாண்டியிருந்தால், ஹைதராபாத் அணியே வெற்றி பெற்றிருக்கும். ஹைதராபாத் அணியின் தோல்வியால் அதன் உரிமையாளர் காவியா மாறன் மைதானத்திலேயே கண் கலங்கினார்.