இந்தியன் 2′ தொடர்பாக லைகா நிறுவனம் புதிய அறிவிப்பு

பிரம்மாண்டத்திற்கு பெயர் போனவர் இயக்குநர் சங்கர். இவரது இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது ‘இந்தியன் 2’.

 

 

 

கமல்ஹாசன் நடித்துள்ள இந்த படத்தில் சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஜூன் 01- ஆம் தேதி நடைபெறவுள்ளது.

 

 

 

இந்தியன் – 2 படத்தின் 2-வது பாடல் வரும் மே 29- ஆம் தேதி வெளியாகும் என லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.