வீரரின் தொகையை விட குறைவான பரிசுத்தொகையைப் பெற்ற கொல்கத்தா?

வீரரின் தொகையை விட குறைவான பரிசுத்தொகையைப் பெற்ற கொல்கத்தா?

2024- ஆம் ஆண்டுக்கான டாடா ஐ.பி.எல். கிரிக்கெட் கோப்பையை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மூன்றாவது முறையாக கைப்பற்றி அசத்தியுள்ளது. கொல்கத்தா அணிக்கு பரிசுத்தொகை ரூபாய் 20 கோடியுடன், கோப்பையும் வழங்கப்பட்டது. இரண்டாமிடம் பிடித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு ரூபாய் 12.5 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

 

 

 

 

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்த உதவிய கொல்கத்தா அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டார்க், ரூபாய் 24.75 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டிருந்தார். வெற்றி பெற்ற அணியின் ஒரு வீரர் ஏலத்தில் எடுக்கப்பட்ட தொகையை விட, அணியின் பரிசுத்தொகைக் குறைவாக இருந்திருப்பது இதுவே முதல்முறை.

 

 

 

 

 

 

கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் ஸ்டார்க், இறுதிப்போட்டியில் விளையாடிய வீடியோக்களையும், புகைப்படத்தையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

 

 

 

 

 

 

இறுதிப்போட்டியில் ஸ்டார்க், ஹர்ஷித் ராணா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். வைபவ் அரோரா, சுனில் நரேன், சக்கரவர்த்தி ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தி அசத்தினர். ரசல் அபாரமாக விளையாடி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.