‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படத்திற்கு இயக்குநர் டி.ராஜேந்தர் புகழாரம்!

'மஞ்சும்மல் பாய்ஸ்' திரைப்படத்திற்கு இயக்குநர் டி.ராஜேந்தர் புகழாரம்!

‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படத்திற்கு இயக்குநர் டி.ராஜேந்தர் புகழாரம்!

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பிரபல நடிகரும், திரைப்பட இயக்குநருமான டி.ராஜேந்தர், “என்னை பொறுத்த வரையில் பட்ஜெட்டை விட சப்ஜெக்ட் தான் ஜெயிக்கும். இத்தனை கோடி பட்ஜெட்டில் படம் எடுக்க வேண்டும் என்று சொன்னால் ‘ஒரு தலை ராகம்’ படத்தை நான் எடுத்திருக்க முடியாது.

 

என்னுடைய சொந்த மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டத்தில் நான் படித்த எனக்கு பிடித்த கல்லூரியில் திரைப்பட தயாரிப்பாளர் இப்ராஹிம் உறுதுணையில் ‘ஒரு தலை ராகம்’ படத்தைத் தயாரித்தேன். அந்த படம், ஒரு கல்லூரி வளாகத்தில் நடக்கக் கூடிய காதல் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த படம் எடுக்க வேண்டுமென்றால் அன்றைய காலத்தில் எவ்வளவு பட்ஜெட்? பட்ஜெட் ஜெயித்ததா? அல்லது சப்ஜெக்ட் ஜெயித்ததா?

 

ஒரு வருடம் முழுவதும் அலங்கார் திரையரங்கில் அப்படம் ஒட்டியது. மஞ்சும்மல் பாய்ஸ்னு ஒரு படம், தமிழகத்தில் இருந்து எடுக்கவில்லை; கேரளாவில் இருந்து வந்து எடுத்தார்கள். அப்படத்தில் ஸ்டார் இல்லை. மக்கள் திரைப்படத்தின் பட்ஜெட்டைப் பார்க்கவில்லை; அதில் இருக்கக்கூடிய விஷயத்தை பார்க்கிறார்கள்; சிந்தனையைப் பார்க்கிறார்கள். அப்படத்தில் பிரம்மாண்டமான செட் கிடையாது. எந்த காலத்திலும் சப்ஜெக்ட் தான் ஜெயிக்கும்” எனத் தெரிவித்துள்ளார்