“16 வயதில் ஈவென்ட் மேனேஜ்மெண்ட் தொடங்கி தோல்வி அடைந்தேன்”- நடிகை அபர்ணா பிள்ளை சுவாரஷ்ய பேட்டி!
‘புதுக்கோட்டையில் இருந்து சரவணன்’ திரைப்படத்தின் கதாநாயகி அபர்ணா பிள்ளை, தனியார் தொலைக்காட்சிக்கு நேர்காணல் அளித்திருந்தார்.
அப்போது அவர் கூறியதாவது, ‘நான் இரண்டு பள்ளிகளை நடத்திக் கொண்டிருக்கிறேன்; கிரியேஷன், புரோடக்ஷன் துறையில் இருக்கிறேன். இதனால் எனக்கு நிறைய பொறுப்புகள் உள்ளது. சினிமாவை மிஸ் செய்யவில்லை. உங்களால் முடிந்த விஷயத்தைச் செய்ய வேண்டும்; செய்யக்கூடாத விஷயங்களை செய்யக்கூடாது.
சினிமாவில் இல்லையென்று ஒருபோதும் நான் வருத்தப்பட்டதில்லை. சுமார் 12 வருடங்கள் டெலிவிஷன் புரொடக்ஷன் பண்ணினேன். 16 வயதில் ஈவென்ட் மேனேஜ்மெண்ட்டைத் தொடங்கினேன். ஆனால் அது முழுமையாக தோல்வியில் முடிந்தது. எனினும், எனக்கு அதில் நல்ல அனுபவம் கிடைத்தது” எனத் தெரிவித்துள்ளார்.