‘புஷ்பா 2’- வின் ‘The Couple Song’ வெளியானது- ரசிகர்கள் உற்சாகம்!

'புஷ்பா 2'- வின் 'The Couple Song' வெளியானது- ரசிகர்கள் உற்சாகம்!

 

கடந்த 2021- ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகி வெளியான திரைப்படம் ‘புஷ்பா’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார்.

 

 

 

 

‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படத்திற்கு இயக்குநர் டி.ராஜேந்தர் புகழாரம்!

திரைப்படத்தின் கதையும், பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியாகிய ‘புஷ்பா’ சுமார் ரூபாய் 300 கோடிக்கு மேல் வசூலாகி சாதனை படைத்தது.

இதையடுத்து, அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடிப்பில் ‘புஷ்பா 2’ திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் இடம் பெற்றுள்ள ‘The Couple Song’ பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், சர்வதேச தம்பதியர் தினமான இன்று (மே 29) காலை 11.07 மணிக்கு யூ-டியூப் தளத்தில் வெளியாகியுள்ளது.

“யார பார்த்தாலும் தள்ளி நிற்கணும் என்பதை உடைத்தெறிந்த ஹீரோ இவர் தான்”-பாடலாசிரியர் சினேகன் பேச்சு!

இந்த பாடல் புஷ்பா 2 திரைப்படத்தின் இரண்டாவது பாடல் ஆகும். பாடல் வெளியாகியுள்ள சில நிமிடங்களிலேயே 8 லட்சம் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது.