முதன்முறையாக அமெரிக்காவில் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்!- ஐசிசி முடிவுக்கு என்ன காரணம்?

 

முதன்முறையாக அமெரிக்காவில் டி20 உலகக்கோப்பைக் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ளது. ஐ.சி.சி.யின் இந்த முடிவுக்கு என்ன காரணம் என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்.

“பாடலாசிரியரும், இசையமைப்பாளரும் புருஷன் பொண்டாட்டி மாதிரி”- சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய் ஆண்டனி!

உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கும் டி20 ஆண்கள் உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் மாதம் தொடங்குகிறது. டி20 உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடர், அமெரிக்கா, மேற்கிந்திய தீவுகள் ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது.

குறிப்பாக, அமெரிக்காவில் டி20 உலகக்கோப்பைக் கிரிக்கெட் போட்டிகள் முதன்முறையாக நடைபெறுகின்றன. இதற்கு என்ன காரணம் என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம். அமெரிக்காவில் டென்னிஸ், கூடைப்பந்து, கால்பந்து போன்றவற்றிற்கே அதிகமவுசு இருக்கிறது. தற்போது அமெரிக்காவில் தெற்காசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம் உள்ளனர்.

இந்த நிலையில், தங்கள் நாட்டில் டி20 உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரை நடத்த வேண்டும் என ஐ.சி.சி.யிடம் அமெரிக்கா கிரிக்கெட் சங்கம் விண்ணப்பம் செய்திருந்தது. இதையடுத்து, ஐ.சி.சி. அமெரிக்காவில் போட்டிகளை நடத்த முடிவுச் செய்துள்ளது.

இவர் மோடி Biopic-ஐ இயக்கியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்- நடிகர் சத்யராஜ் ஓபன் டாக்!

அமெரிக்காவில் கிரிக்கெட்டிற்கு என்று பெரியளவில் வசதிகள் இல்லையென்றாலும் கூட, அதனை நிவர்த்திச் செய்ய அமெரிக்க கிரிக்கெட் சங்கம் முயற்சி செய்து வருகிறது. தற்போது டி20 உலகக்கோப்பைக் கிரிக்கெட் போட்டிகள் புளோரிடா மாகாணத்தில் உள்ள மைதானத்திலும், டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள மைதானத்திலும் நடைபெறவுள்ளன.

டி20 உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடர் முதன்முறையாக அமெரிக்காவில் நடைபெறவுள்ளதால் அந்நாட்டில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.