தனியார் தொலைக்காட்சிப் பேட்டியளித்த இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன், “என்னுடைய கிரிக்கெட் மைதானத்திற்கு வந்த இந்திய அணியின் வீரர்கள் தினேஷ் கார்த்திக் உள்ளிட்டோர் நாங்கள் எதிர்பார்த்ததை விட கிரிக்கெட் மைதானம் சிறப்பாக உள்ளதாகவும், இளைஞர்கள் நன்கு பயிற்சி பெறும் வகையில் அமைந்துள்ளதாகவும் தெரிவித்தனர். அது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.
நான் எனது கிரிக்கெட் மைதானம் திறப்பு விழாவிற்கு கிரிக்கெட் ஜாம்பவான் பிரையன் லாராவுக்கு அழைப்பு விடுத்திருந்தேன். அவர் நிச்சயம் எனது மைதானத்திற்கு வருகை தருவதாக உறுதியளித்துள்ளார். என்னுடைய கிராமத்தில் அகாடமி தொடங்கியதை சக கிரிக்கெட் வீரர்கள் பாராட்டினர். எனது கிராமத்தில் உள்ள இளைஞர்கள், கிரிக்கெட் பயிற்சியைப் பெற்று வருகின்றனர்.
இந்த கிராமம் இப்படி இப்போது தான் இப்படி இருக்கிறது; தோனிக்கு அப்புறம் நான் வந்துருக்கேன் என்று தினேஷ் கார்த்திக் அண்ணா கூறினார்.
இவர் மோடி Biopic-ஐ இயக்கியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்- நடிகர் சத்யராஜ் ஓபன் டாக்!
ஐ.பி.எல். போட்டிகளின் போது ரிக்கி பாண்டிங், எனது குடும்பத்தை பற்றி நலம் விசாரிப்பார்” எனத் தெரிவித்துள்ளார்.