“பாடலாசிரியரும், இசையமைப்பாளரும் புருஷன் பொண்டாட்டி மாதிரி”- சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய் ஆண்டனி!

"பாடலாசிரியரும், இசையமைப்பாளரும் புருஷன் பொண்டாட்டி மாதிரி"- சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய் ஆண்டனி!

 

விஜய் மில்டன் இயக்கத்தில் நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘மழை பிடிக்காத மனிதன்’ திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் நடிகர் சத்யராஜ் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்தியன் 2′ தொடர்பாக லைகா நிறுவனம் புதிய அறிவிப்பு

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி, பாடலாசிரியரும், இசையமைப்பாளரும் புருஷன் பொண்டாட்டி மாதிரி; ரெண்டு பேருமே முக்கியம் தான்; உறவு தான் முக்கியம்; இரண்டுமே முக்கியம். படத்தைப் பொறுத்த வரையில் இசை தான்; பாட்டுன்னு வரும் போது பாடலாசிரியரின் பங்களிப்பும் அதில் உள்ளது.

ஏதோ சொன்ன சின்ன விஷயம் தவறுதலாகப் புரிந்துக் கொண்டு பரப்பப்பட்டு வருகிறது. அதை கிரியேட் பண்ணரெண்டு பேருக்கும் தெரியும். இளையராஜா சாருக்கும் தெரியும், வைரமுத்து சாருக்கும் தெரியும்; அவங்க தெளிவா தான் இருக்காங்க. நாம கூலா இருப்போம் தப்பில்ல” எனத் தெரிவித்துள்ளார்.

‘இந்தியன் 2’ திரைப்படத்தின் ‘Chengaluva’ பாடல் வெளியானது!

இசை பெரிதா? பாடல் பெரிதா? என்ற பஞ்சாயத்து தமிழ் சினிமாவைத் திணறிடித்து வருகிறது. இது குறித்து திரைப்பிரபலன்கள் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் ரஜினிகாந்திடம் இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.