இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு கவுதம் கம்பீர் தகுதியானவரா?

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு கவுதம் கம்பீர் தகுதியானவரா?

 

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஹைதராபாத் அணியின் தோல்விக்கு என்ன காரணம்?

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக உள்ள ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் வரும் டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரும் நிறைவடைகிறது. பயிற்சியாளர் பதவியில் நீடிக்க ராகுல் டிராவிட் விரும்பவில்லை. இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்குமாறு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பி.சி.சி.ஐ. அழைப்பு விடுத்திருந்தது.

இதையடுத்து, ஏராளமான விண்ணப்பங்கள் பி.சி.சி.ஐ.க்கு வந்தது. எனினும், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங், இலங்கை அணியின் முன்னாள் வீரர் சங்கக்காரா ஆகியோரை பி.சி.சி.ஐ. நாடியதாகவும், அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்ததாகவும் தகவல் கூறுகின்றனர்.

‘புஷ்பா 2’- வின் ‘The Couple Song’ வெளியானது- ரசிகர்கள் உற்சாகம்!

இந்த சூழலில், கொல்கத்தா அணியின் வெற்றி காரணமானவரும், அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளருமான கவுதம் கம்பீரை, இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்க பி.சி.சி.ஐ. முடிவுச் செய்திருப்பதாகவும், இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.