சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இளையராஜாவின் மகனும், இசையமைப்பாளருமான கார்த்திக் ராஜா பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
தீவிர பயிற்சியில் இந்திய அணி வீரர்கள்!
அப்போது, இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா தெரிவித்ததாவது, “மக்கள் எது சொல்கிறார்களோ அது தான் பெரியது. ஒவ்வொருவருக்கும் அவர்களது மொழி முக்கியம். எனக்கு தமிழ் மொழி முக்கியம். தமிழ் மொழி தான் சிறந்தது என்று நான் சொல்கிறேன். தேவாரம் உள்ளிட்டவைகளில் இருந்து வந்தது தான் இசை. என்னை பொறுத்த வரையில் தமிழும் இசையும் வேறு வேறு இல்லை. தமிழர்களும் இசையும் வேறு வேறு இல்லை.
கார்ல்சனை வீழ்த்தி பிரக்ஞானந்தா அசத்தல்!
குத்து பாட்டு பாடினால் கூட உங்கள் இதயத்தில் எப்படி பதிந்து போய் உள்ளதோ? அதை விட சிறந்தது இசை. இசை யூனிவெர்ஸ் என்றால் அதில் மவுண்ட் எவரெஸ்ட் எங்க அப்பா” எனத் தெரிவித்துள்ளார்.