கார்ல்சனை வீழ்த்தி பிரக்ஞானந்தா அசத்தல்!

கார்ல்சனை வீழ்த்தி பிரக்ஞானந்தா அசத்தல்!

 

உலகின் நம்பர் ஒன் செஸ் வீரர் கார்ல்சனை வீழ்த்தி அசத்தினார் தமிழக வீரர் பிரக்ஞானந்தா.

இவர் மோடி Biopic-ஐ இயக்கியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்- நடிகர் சத்யராஜ் ஓபன் டாக்!

நார்வே நாட்டில் நடைபெற்ற செஸ் தொடரில் கிளாசிக்கல் ஆட்டத்தில் கலந்து கொண்ட தமிழகத்தைச் சேர்ந்த 18 வயதான கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, உலகின் நம்பர் ஒன் செஸ் வீரர் கார்ல்சனை எதிர்கொண்டார். வெள்ளை நிற காய்களைத் தேர்வு செய்து விளையாடிய பிரக்ஞானந்தா, கார்ல்சனை வீழ்த்தினார். தோல்வியின் மூலம் கார்ல்சன் புள்ளிகள் பட்டியலில் 5-வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

“அவர் எனது கிரிக்கெட் மைதானத்திற்கு வருவதாக உறுதியளித்துள்ளார்”- கிரிக்கெட் வீரர் நடராஜன் பேட்டி!

இதையடுத்து, பிரக்ஞானந்தாவுக்கு பல்வேறு தலைவர்களும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, இதே தொடரில் மகளிர் பிரிவில் பிரக்ஞானந்தாவின் சகோதரி வைஷாலி முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.