‘இந்தியன் 2’ இசை வெளியீட்டு விழா….பட நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

'இந்தியன் 2' இசை வெளியீட்டு விழா....பட நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

 

‘இந்தியன் 2’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா தொடர்பாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது!

பிரம்மாண்டத்திற்கு பெயர் போன பிரபல இயக்குநர் சங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ளது ‘இந்தியன் 2’ திரைப்படம். இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் மற்றும் ரெட் ஜெயிண்ட்ஸ் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளனர்.

நடிகர் கமல்ஹாசனுடன் சித்தார்த், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளது [படத்தை மேலும் மெருகேற்றியுள்ளது. இப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி, பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா தொடர்பாக படத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

“அதுல எவரெஸ்ட் எங்க அப்பா”- கார்த்திக் ராஜா பேட்டி!

அதன்படி, ஜூன் 01- ஆம் தேதி அன்று மாலை 06.00 மணிக்கு சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 12- ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் ‘இந்தியன் 2’ வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.