“இந்தியன் 2 படத்தில் உள்ள சர்ப்ரைஸ்…சித்தார்த்தின் ரோல் என்ன?”- போட்டு உடைத்த அந்தணன்!

 

‘இந்தியன் 2’ திரைப்படம் குறித்து திரைப்பட விமர்சகர் அந்தணன் தனியார் தொலைக்காட்சிக்கு நேர்காணல் அளித்திருந்தார். அவர் அதில் தெரிவித்துள்ளவைக் குறித்து விரிவாகப் பார்ப்போம்.

“கமல்ஹாசனும், சங்கரும் இந்திய சினிமாவின் பெருமைகள்”- மாதம்பட்டி ரங்கராஜ் புகழாரம்!

அந்தணன் தெரிவித்துள்ளதாவது, “எனக்கு சங்கர் மீது மிகப்பெரிய நம்பிக்கை இருக்கிறது; இந்தியன் 2 திரைப்படம் வேற மாதிரி வரும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. ஆனால் இப்போது உள்ள இளைஞர்கள், இந்தியன் 2 திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக், பர்ஸ்ட் சிங்குலுக்கு பெரியதாக ஆர்வம் காட்டவில்லை. இன்றைக்கு தியேட்டருக்கு வருவதே இளைஞர்கள் கூட்டம் தான்.

அதனை நிரப்புவதற்கு நாம் என்ன வைத்திருக்கிறோம் என்பது மிக முக்கியமானது. இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசன், சுதந்திர போராட்ட தியாகியாக நடிக்கிறார். அவர் களத்தில் எப்படியெல்லாம் போராடினார் என்பதை எடுத்துக்காட்டும் பாடல் தான் ‘பாரா’ பாடல். சித்தார்த்துக்கு படத்தில் பெரிய ரோல் கொடுத்திருக்கிறார்கள். சித்தார் கிட்டத்தட்ட கமலுக்கு சமமாக ரோல் பண்ணிருக்கார்.

‘டி20 உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடர்’- சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்!

பாதி படம் வரைக்கும் சித்தார்த் வருவதற்கான ரோல் அதில் இருக்கிறது. இந்தியன் தாத்தாவைக் காப்பாற்றுவதே சித்தார்த் என்பது போன்று படம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்தியன் 2 இறுதியில் தான் எஸ்.ஜெ.சூர்யா படத்தில் என்ட்ரி கொடுக்கிறார். ரோலக்ஸ் மாதிரி எஸ்.ஜெ.சூர்யா வருகிறார். கமல் இல்லாமல் ரசிக்கக் கூடியவை, சித்தார்த், எஸ்.ஜெ.சூர்யாவின் நடிப்பு ஆகும்” எனத் தெரிவித்துள்ளார்.