‘டி20 உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடர்’- சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்!

'டி20 உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடர்'- சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்!

 

ஐ.சி.சி.யின் டி20 உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடர் இன்று (ஜூன் 02) தொடங்கியுள்ள நிலையில், சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது கூகுள்!

“கவுதம் கம்பீருக்கு என்ன தகுதி இருக்கு?”- வறுத்தெடுக்கும் தோனி ரசிகர்கள்!

ஐ.சி.சி.யின் 9-வது டி20 உலகக்கோப்பைக் கிரிக்கெட் போட்டி அமெரிக்காவின் நியூயார்க் மைதானத்தில் தொடங்கியது. முதல் போட்டியில் கனடா- அமெரிக்கா அணிகள் மோதின. இதில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கனடா அணியை வீழ்த்தி அமெரிக்கா அணி அபார வெற்றி பெற்றது.

'டி20 உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடர்'- சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்!

இத்தொடரில் பங்கேற்றுள்ள 20 அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. 4 பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிப் பெறும். அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் போட்டிகள் நடக்கும் நிலையில், கனடா, அமெரிக்கா, உகாண்டா, நேபாளம், ஓமன், பப்புவா நியூகினியா அணிகள் இத்தொடரில் புதிதாகப் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

“உலகத்துலயே ரொம்ப கஷ்டப்படுற ஒரே ஆளு உண்மையை பேசுறவன்தான்”- நடிகர் சிம்பு சொன்ன தத்துவம்!

ஐ.சி.சி.யின் டி20 உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடர் தொடங்கியுள்ளதை கௌரவிக்கும் வகையில், சிறப்பு டூடுலை கூகுள் வெளியிட்டுள்ளது.