தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கின் அதிரடி அறிவிப்பால் கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
“உலகத்துலயே ரொம்ப கஷ்டப்படுற ஒரே ஆளு உண்மையை பேசுறவன்தான்”- நடிகர் சிம்பு சொன்ன தத்துவம்!
தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக். கடந்த 2004- ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்தார். 26 டெஸ்ட் போட்டிகள், 94 ஒருநாள் போட்டிகள், 60 டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியுள்ள தினேஷ் கார்த்திக், உலகக்கோப்பைப் போட்டிகளிலும் விளையாடி அசத்தியுள்ளார்.
குறிப்பாக, டெஸ்ட் போட்டிகளில் 1,025 ரன்களையும், ஒருநாள் போட்டிகளில் 1,752 ரன்களையும், டி20 போட்டிகளில் 686 ரன்களையும் குவித்துள்ளார். அதேபோல், கடந்த 2008- ஆம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் அறிமுகமாகிய தினேஷ் கார்த்திக், நடப்பு சீசனில் பெங்களூரு அணியில் இடம் பெற்றிருந்த நிலையில், ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஐ.பி.எல். போட்டியில் ஓய்வுப் பெறுவதாக அறிவித்துள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.
ஐ.பி.எல். தொடரில் மொத்தம் 257 போட்டிகளில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி 4,842 ரன்களை எடுத்துள்ளார். இந்த சூழலில், சர்வதேச கிரிக்கெட் உள்பட அனைத்து விதமான் போட்டிகளில் இருந்தும் ஓய்வுப் பெறுவதாக கிரிக்கெட் தினேஷ் கார்த்திக் அதிரடியாக அறிவித்துள்ளார். தினேஷ் கார்த்திக்கின் அறிவிப்பு அவரது ரசிகர்களுக்கு மேலும் அதிர்ச்சி அளித்துள்ளது. தனது ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி என்றும் குறிப்பிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் தினேஷ் கார்த்திக் பதிவிட்டுள்ளார்.
மனமுடைந்து அழுத கிறிஸ்டியானோ ரொனால்டோ! (உருக்கமான வீடியோ)
எனினும், டி20 கிரிக்கெட் உலகக்கோப்பைக்கான வர்ணனையாளர் குழுவில் தினேஷ் கார்த்திக் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.