“கவுதம் கம்பீருக்கு என்ன தகுதி இருக்கு?”- வறுத்தெடுக்கும் தோனி ரசிகர்கள்!

"கவுதம் கம்பீருக்கு என்ன தகுதி இருக்கு?"- வறுத்தெடுக்கும் தோனி ரசிகர்கள்!

 

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக உள்ள ராகுல் டிராவிட்டிற்கு பிறகு கொல்கத்தா அணியின் ஆலோசகரான கவுதம் கம்பீரை நியமிக்க பி.சி.சி.ஐ. முடிவுச் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து, கவுதம் கம்பீர் பெயரே திரும்பும் திசை எல்லாம் பேசப்படுகிறது.

மனமுடைந்து அழுத கிறிஸ்டியானோ ரொனால்டோ! (உருக்கமான வீடியோ)

எனினும், இதே கவுதம் கம்பீர் தான் இதற்கு முன்பு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான தோனியை அடிக்கடி வம்புக்கு இழுத்தவர். இந்திய கிரிக்கெட் அணிக்கு தோனி செய்த சாதனைகள் மகத்தானவை. அதில் மூன்று ஐ.சி.சி. கோப்பைகளை வென்று இந்தியாவிற்கு பெருமைச் சேர்ந்திருந்தார்.

இது குறித்து தோனி புகழப்படும் போதெல்லாம், கவுதம் கம்பீர் அதற்கு எதிரான கருத்துகளை முன் வைத்து வந்துள்ளார். தோனி மட்டுமே உலகக்கோப்பையைப் பெற்று தரவில்லை என கம்பீர் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். அந்த தொடரில் கவுதம் கம்பீரின் பங்களிப்பும் இருந்ததை மறைமுகமாகக் காட்டிக் கொள்வார்.

“விஜய்யிடம் கற்பதற்கு நிறைய இருக்கிறது”- நடிகர் மோகன் பெருமிதம்!

இந்த சூழலில், நடந்து முடிந்த ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மூன்றாவது முறையாக கோப்பையைக் கைப்பற்றியது. இதற்கு காரணம், கவுதம் கம்பீர் தான் எனப் பேசப்பட்டு வருகிறது. இதையடுத்து, சமூக வலைத்தளங்களில் தோனியின் ரசிகர்கள், கவுதம் கம்பீரை வறுத்தெடுத்து வருகின்றனர்.

கொல்கத்தா அணியின் வெற்றிக்கு கேப்ட்டனே காரணம் என்று கூறும் ரசிகர்கள், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு வர கமபீருக்கு என்ன தகுதி இருக்கு? கொல்கத்தா அணியின் வெற்றியைக் கொண்டாட என்ன தகுதி இருக்கு என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.