மனமுடைந்து அழுத கிறிஸ்டியானோ ரொனால்டோ! (உருக்கமான வீடியோ)

மனமுடைந்து அழுத்த கிறிஸ்டியானோ ரொனால்டோ! (உருக்கமான வீடியோ)

 

கால்பந்து தொடரின் தோல்வியால் கிறிஸ்டியானோ ரொனால்டோ மனமுடைந்து அழுகும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

டி20 உலகக்கோப்பையை வெல்ல நியூயார்க் மைதானத்தில் பயிற்சியில் இந்திய அணி வீரர்கள்!

கால்பந்து உலகின் ஜாம்பவானாக திகழ்பவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். சவூதி அரேபியாவின் அல்-நாசர் அணியின் கேப்டனாக கிறிஸ்டியானோ ரொனால்டோ உள்ளார். சவூதி ப்ரோ லீக் தொடரில் பங்கேற்று தனது அணியை திறமையாக வழிநடத்தி இறுதிப் போட்டி வரைக்கும் கொண்டு சென்றார்.

இறுதிப் போட்டியில், அல்- ஹிலால் அணியை அல்-நாசர் அணி எதிர்கொண்டது. கோப்பையை வெல்ல அல்- நாசர் அணிப் போராடிய நிலையில், 5-4 என்ற கோல் கணக்கில் அல்- ஹிலால் அணியிடம் தோற்றது. தோல்வியடைந்ததால் மனமுடைந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ, கால்பந்து மைதானத்திலேயே மனமுடைந்து அழுதார்.

இந்த உருக்கமான காணொளி ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. ரொனால்டோவின் வீடியோவைப் பகிர்ந்து அவருக்கு அவரது ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

“குழந்தைக்கு அம்மாவாக நடிக்க என்ன காரணம்?”-கண் கலங்கிய நடிகை வாணி போஜன்!

இதனிடையே, ஒரே சீசனில் 35 கோல்களை அடித்த ஒரே வீரர் என்ற பெருமையும் பெற்றார் ரொனால்டோ என்பது குறிப்பிடத்தக்கது.