“விஜய்யிடம் கற்பதற்கு நிறைய இருக்கிறது”- நடிகர் மோகன் பெருமிதம்!

"விஜய்யிடம் கற்பதற்கு நிறைய இருக்கிறது"- நடிகர் மோகன் பெருமிதம்!

 

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய்யின் நடிப்பில் உருவாகி வரும் ‘GOAT’ திரைப்படத்தளத்தில் விஜய்யுடனான நினைவுகள் குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பிரபல நடிகர் மோகன் நேர்காணல் அளித்தார்.

மனமுடைந்து அழுத கிறிஸ்டியானோ ரொனால்டோ! (உருக்கமான வீடியோ)

அந்த நேர்காணலில் நடிகர் மோகன் தெரிவித்ததாவது, “விஜய்யுடன் நடிப்பதற்கு வாய்ப்பு வந்திருக்கிறது; இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கும், படத்தயாரிப்பு நிறுவனமான AGS- க்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். விஜய்யிடம் கற்பதற்கு நிறைய இருக்கிறது; ரொம்ப அமைதியான மனிதர். அவர் மாதிரி அமைதியாக இருக்க அவரிடம் நான் கற்க வேண்டும் என நினைக்கிறேன். இதை விஜய்யிடம் கூறியுள்ளேன்.

“குழந்தைக்கு அம்மாவாக நடிக்க என்ன காரணம்?”-கண் கலங்கிய நடிகை வாணி போஜன்!

படம் தான் ஒருவரின் ஸ்டார் அந்தஸ்தை நிர்ணயிக்கிறது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் வெளியாகிறது. படங்கள் ஹிட் ஆனால் நடிகர் மற்றும் திரைப்படத்தின் இயக்குநருக்கு ஸ்டார் அந்தஸ்து கிடைக்கிறது. படம் நன்றாக ஓடினால் ஸ்டார் அந்தஸ்து கிடைக்கும்; படம் ஓடவில்லை என்றால் ஸ்டார் அந்தஸ்து கிடைக்காது” எனத் தெரிவித்துள்ளார்.