“அப்பா இயக்கத்தில் திரைப்படத்தில் நடிப்பது எப்போது?”- நடிகை அதிதி சங்கர் விளக்கம்!

"அப்பா இயக்கத்தில் நடிப்பது எப்போது?"- நடிகை அதிதி சங்கர் விளக்கம்!

 

சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நேற்று (ஜூன் 01) மாலை 06.00 மணிக்கு ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. இப்படத்தின் இயக்குநர் சங்கர், நடிகர் கமல்ஹாசன் மற்றும் படத் தயாரிப்பாளர்கள், திரைப் பிரபலங்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

உதவி தேவைப்படுவோரின் கவனத்திற்கு…..’மாற்றம் அறக்கட்டளை’-யை அணுக சிறப்பு உதவி எண்கள் அறிவிப்பு!

விழாவில் பேசிய இயக்குநர் சங்கரின் மகளும், நடிகையுமான அதிதி சங்கர், “அனைவரும் வணக்கம், யாரும் ஹாய் சொல்லல, நான் பேசல; ஏங்க ஏன் இவ்வளவ் சொங்கியா சொல்ட்ரீங்க…நன்றி…ஹாய் ஹாய்….அண்ணா எனக்கும் தண்ணீ தர்லணா; நானும் அந்த தண்ணியதான் சொன்னேன்பா. இந்த அண்ணா தான் வேற மாதிரி யோசிச்சிட்டு வேற மாதிரி பேசுறாரு.

எல்லாரும் இங்க வந்தததுக்கு நன்றி. நானும் உங்கல மாதிரி ரொம்ப ரொம்ப ஆர்வமாக இருக்கன். அப்பாவோட ஹார்டுவோர்க எல்லாரும் பாக்க போறீங்க. எல்லாரும் விழாவில் கலந்துக் கொள்ளுங்கள்; அப்பாவின் டைரக்ஷனில் அதிதி சங்கர் எப்போது நடிப்பார்? அப்பா முடிவுச் செய்து எனக்கு வாய்ப்பு வழங்குவார்; இதுக்கெல்லாம் அடம் பிடிப்பாங்களா, அப்பா எப்படினு எல்லாருக்கும் தெரியும்.

“விஜய்யிடம் கற்பதற்கு நிறைய இருக்கிறது”- நடிகர் மோகன் பெருமிதம்!

எனக்குனு ரோல் இருந்தா நிச்சயம் என்னை வச்சி படம் பண்ணுவாரு. மேபி மேபி சூன்” என்று கலகலப்பாகப் பேசினார்.