உதவி தேவைப்படுவோரின் கவனத்திற்கு…..’மாற்றம் அறக்கட்டளை’-யை அணுக சிறப்பு உதவி எண்கள் அறிவிப்பு!

உதவி தேவைப்படுவோரின் கவனத்திற்கு.....'மாற்றம் அறக்கட்டளை'-யை அணுக சிறப்பு உதவி எண்கள் அறிவிப்பு!

 

பிரபல தமிழ் திரைப்பட நடிகரும், இயக்குநருமான ராகவா லாரன்ஸ், ‘மாற்றம் அறக்கட்டளை’-யைத் தொடங்கி ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார். நடிகர் ராகவா லாரன்ஷுடன் நடிகர் எஸ்.ஜே.சூர்யா, நடிகை அறந்தாங்கி நிஷா ஆகியோர் இணைந்து செயல்பட தொடங்கியுள்ளனர்.

“நானும் உங்க புள்ளதான்”… பாட்டியைத் தத்தெடுத்த இளைஞர்!

இந்த நிலையில் மாற்றம் அறக்கட்டளையை உதவி தேவைப்படுவோர் எளிதில் அணுகக் கூடிய வகையில், https://maatramfoundation.com/ என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், 95510-14389, 89259- 27943, 044- 47963939 ஆகிய எண்களை உதவித் தேவைப்படுவோர் நேரடியாக தொலைபேசியிலோ, இணையதளம் மூலமோ தொடர்புக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், 89255-35647, 89255-35649 ஆகிய வாட்ஸ் அப் எண்களையும் அணுகலாம் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த வாட்ஸ் அப் எண்களில் தங்களின் குடும்ப சூழ்நிலையையும், தேவைப்படும் உதவிகளையும் கோரினால், உடனடியாக மாற்றம் அறக்கட்டளை நிர்வாகிகள் உதவிகள் வழங்குவர்.

“நான் பெரிய நடிகை இல்லை; என்னை கண்டந்தும் விஜயகாந்த் எழுந்து நின்றார்; இந்த நல்ல மனசு யாருக்கு வரும்”- நடிகை பிரேமலா உருக்கம்!

இந்த சீரிய முயற்சிக்கு நடிகர் ராகவா லாரன்ஸ்க்கு உலகம் முழுவதும் தமிழர்கள் உணர்ச்சிப் பொங்க தங்களது நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.