“நான் பெரிய நடிகை இல்லை; என்னை கண்டந்தும் விஜயகாந்த் எழுந்து நின்றார்; இந்த நல்ல மனசு யாருக்கு வரும்”- நடிகை பிரேமலா உருக்கம்!

 

மறைந்த நடிகர் விஜயகாந்த்தின் நடிப்பில் கடந்த 1984- ஆம் ஆண்டு வெளியான ‘வைதேகி காத்திருந்தாள்’ திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தது.

விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது!

இப்படத்தில் கதாநாயகியாக நடித்த பிரேமலா, தனியார் தொலைக்காட்சிக்கு நேர்காணல் அளித்தார். அதில் கேப்டன் விஜயகாந்த் குறித்து தனது நினைவுகளைப் பகிர்ந்துக் கொண்டார். அப்போது நடிகை பிரேமலா தெரிவித்ததாவது, “ஒரே ஸ்டூடியோவில் ஷூட்டிங் இருந்தது; இந்த ஷூட்டிங்க்ல விஜயகாந்த் இருந்தாங்க. போயிட்டு ஹலோன்னு சொல்லிட்டு வரலாம்னு போனான். விஜயகாந்த் அங்கு உட்காந்துட்டு இருந்தாங்க. என்னை பார்த்த உடனே விஜயகாந்த் எழுந்துட்டாரு.

எனக்கு ஷாக் ஆகிடுச்சு. நான் ஒன்னும் மிகப்பெரிய நடிகை இல்லை. ஏன் சார் ஏந்துருச்சுட்டீங்க. நீ ஆர்ட்டிஸ்ட் மா; ஏன் மா இப்படி பண்ற. நீ உக்காரு உக்காரு சொன்னாரு. எனக்கு ரொம்ப சந்தோஷம். எத்தனையோ நாளுக்கு அப்புறம் நான் விஜயகாந்த் வீட்டுக்கு போனேன். குடும்பத்த பத்தி கேப்பாரு. அப்ப விஜயகாந்த் மிஸ்ஸஸ் பிரேமலதா விஜயகாந்த் சொன்னாங்க. 100 முறை ‘வைதேகி காத்திருந்தாள்’ திரைப்படத்தைப் பார்த்தேன் என்றார்.

“தனியா இருந்து பழகிக்கோங்க….”- இயக்குநர் செல்வராகவன் உருக்கமான பேச்சு!

இப்ப கூட அந்த படத்தைப் பார்த்தா அழுகை வரும். அவங்க 100 முறை படம் பார்த்தது எனக்கு ரொம்ப சந்தோஷம்” எனக் கூறினார்.