“நானும் உங்க புள்ளதான்”… பாட்டியைத் தத்தெடுத்த இளைஞர்!

"நானும் உங்க புள்ளதான்"... பாட்டியைத் தத்தெடுத்த இளைஞர்!

 

ஏழை, எளிய நிலையில் கண்ணீருடன் தனது கஷ்டங்களை இளைஞர் ஒருவரிடம் பகிரும் பாட்டிக்கு, நான் இருக்கிறேன்; நான் உங்க புள்ளதான் என்று உதவிக்கரம் நீட்டிய இளைஞரின் வீடியோ சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளது என்றே சொல்லலாம்.

விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது!

சமூக வலைதளங்களில் வைரலாகும் அந்த காணொளியில், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பாட்டி தனக்கு மூன்று பெண் பிள்ளைகள் என்றும், மழை பெய்தால் வீட்டில் தண்ணீர் ஒழுகிறது. கொத்தல் வீட்டில் இருக்கிறேன். அனாதையாக இருக்கிறேன்; கஞ்சிதான் குடிக்கிறேன் என்று கண்ணீர் மல்கக் கூறினார்.

அதற்கு அந்த இளைஞரோ, “உங்களுக்கு என்ன உதவி வேணும் நான் செய்கிறேன்; இந்த ரூபாயை வைத்துக் கொண்டு அருகில் உள்ள கடையில் வாங்கி நன்றாக உணவு சாப்பிடுங்கள்; சாப்பிடாமல் இருக்காதீர்; இந்த புடவையை வைத்துக் கொள்ளுங்கள். வீட்டை சரி செய்து தருகிறேன்; நான் உங்க புள்ளதான்” என்று கூறி அந்த முகம் தெரியாத இளைஞர் விடைபெற்றார்.

“தனியா இருந்து பழகிக்கோங்க….”- இயக்குநர் செல்வராகவன் உருக்கமான பேச்சு!

இந்த காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.