காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பிரபல நடிகை! (வைரலாகும் வீடியோ)

காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பிரபல நடிகை! (வைரலாகும் வீடியோ)

 

வாகன சோதனையின் போது, நடிகை நிவேதா பெத்துராஜ் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

“தனியா இருந்து பழகிக்கோங்க….”- இயக்குநர் செல்வராகவன் உருக்கமான பேச்சு!

தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் வாகன சோதனையின் போது அவ்வழியே பிரபல நடிகை நிவேதா பெத்துராஜ் வந்துள்ளார். அப்போது, நடிகையின் காரை நிறுத்திய காவல்துறையினர், காரின் பின்பக்க டிக்கியைத் திறக்குமாறு கூறியுள்ளனர். இதற்கு மறுத்துள்ள நடிகை, காவல்துறையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இது தொடர்பாக காட்சிகள் டுவிட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், தெலுங்கு படம் ஒன்றில் நிவேதா பெத்துராஜ் நடித்து வருவதாகவும் அந்த படத்திற்கான புரோமோஷன் வீடியோவாக இது இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது!

எனினும், நடிகை நிவேதா பெத்துராஜ் தரப்பில் இருந்து இதுவரை எந்தவொரு விளக்கமும் அளிக்கப்படவில்லை. கடந்த 2016- ஆம் ஆண்டு வெளியான ‘ஒரு நாள் கூத்து’ திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.