“கமல்ஹாசனும், சங்கரும் இந்திய சினிமாவின் பெருமைகள்”- மாதம்பட்டி ரங்கராஜ் புகழாரம்!

"கமல்ஹாசனும், சங்கரும் இந்திய சினிமாவின் பெருமைகள்"- மாதம்பட்டி ரங்கராஜ் புகழாரம்!

 

பிரம்மாண்டத்திற்கு பெயர்போன திரைப்பட இயக்குநர் சங்கரின் இயக்கத்தில் கமல்ஹாசன், சித்தார், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ள திரைப்படம் ‘இந்தியன் 2’. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க, லைகா நிறுவனம் மற்றும் ரெட் ஜெயிண்ட்ஸ் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளனர்.

கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சிக் கொடுத்த தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கின் அதிரடி அறிவிப்பு!

‘இந்தியன் 2’ திரைப்படம் வரும் ஜூலை 12- ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்களில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நேற்று (ஜூன் 01) மாலை 06.00 மணிக்கு பிரம்மாண்டமாக நடைபெற்றது.

விழாவில் பங்கேற்று பேசிய பிரபல சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ், “எல்லாருக்கும் வணக்கம். சங்கர் சார் மற்றும் கமல்ஹாசன் சார் பயங்கரமான காமினேஷன். அவங்களுடைய காமினேஷன்ல ரொம்ப நாள் கழிச்சு ஒருபடம். எல்லாரை போலவும், நான் வெயிட் பண்ணிட்டு இருக்கன். பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோ பாக்கணும். முகூர்த்தநாள் பட் இருந்தாலும், ஜூலை 12 ஈவ்னிங்ல மிஸ் பண்ணாம இந்தியன் 2 பாக்கணும்னு ஆசையா வெயிட் பண்ணிட்டு இருக்கன்.

“கவுதம் கம்பீருக்கு என்ன தகுதி இருக்கு?”- வறுத்தெடுக்கும் தோனி ரசிகர்கள்!

அவங்க இரண்டு பேருமே இந்திய சினிமாவின் பெருமைகள்; இந்த படம் மிகப்பெரிய வெற்றியடை வேண்டும்னு என்னுடைய வாழ்த்துக்கள். நானும், யோகி பாபுவும் ‘மிஸ் மேகி’ என்னும் படத்தைப் பண்ணிருக்கோம். அந்த படம் செப்டம்பர்ல ரிலீஸ் ஆகுது. அதுக்கு அடுத்த படம் சீனுராமசாமி சார் டைரக்ஷ்ல ஷூட்டிங் ஜூலை 15-க்கு மேல ஆரம்பிக்கப் போகுது. இன்னும் ரெண்டு படம் கமிட் பண்ணிருக்கன். வரிசையா படம் வர போகுது” எனத் தெரிவித்துள்ளார்.