“கடினமான சமயங்களில் ஓடி ஒளிய மாட்டேன்”- கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா ஓபன் டாக்!

"கடினமான சமயங்களில் ஓடி ஒளிய மாட்டேன்"- கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா ஓபன் டாக்!

 

கடினமான சமயங்களில் ஓடி ஒளிய மாட்டேன்; எல்லாவற்றையும் தலைநிமிர்ந்து எதிர்கொள்வேன் என்று இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ஹர்திக் பாண்டியா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சிக் கொடுத்த தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கின் அதிரடி அறிவிப்பு!

அமெரிக்காவில் நடந்து வரும் ஐ.சி.சி.யின் டி20 உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில் கேப்டன் ரோஹித் சர்மா, தலைமையிலான இந்திய அணி விளையாடி வருகிறது. தொடரின் முதல் போட்டியில் வங்கதேசம் அணியை எதிர்கொண்ட இந்திய அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தனது முதல் வெற்றியைப் பதிவுச் செய்து அசத்தியது. அணியின் துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியா உள்ளார்.

இந்த நிலையில், “என்னுடைய வெற்றிகளை ரொம்ப சீரியஸாக எடுத்துக் கொள்ள மாட்டேன்; எவ்வளவு சிறப்பாக செயல்பட்டாலும் அதை மறந்துவிட்டு அடுத்தக் கட்டத்தை நோக்கிச் சென்று விடுவேன். அதே நேரத்தில், கடினமான சமயங்களில் ஓடி ஒளிய மாட்டேன். எல்லாவற்றையும் தலைநிமிர்ந்து எதிர்கொள்வேன்” என்று இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் ஹர்திக் பாண்டியா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

“இந்தியன் 2 படத்தில் உள்ள சர்ப்ரைஸ்…சித்தார்த்தின் ரோல் என்ன?”- போட்டு உடைத்த அந்தணன்!

இதனிடையே, வங்கதேசம் அணியுடனான போட்டியில், தனது கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஆட்டோ கிராஃப் போட்டு அவர்களுக்கு இன்பதிர்ச்சிக் கொடுத்தார் ஹர்திக் பாண்டியா என்பது குறிப்பிடத்தக்கது.