ஓய்வை அறிவித்த பிரபல கிரிக்கெட் வீரர் கேதர் ஜாதவ்!

ஓய்வை அறிவித்த பிரபல கிரிக்கெட் வீரர் கேதர் ஜாதவ்!

 

அனைத்து வகையான போட்டிகளில் இருந்தும் ஓய்வுப் பெறுவதாக இந்திய கிரிக்கெட் வீரர் கேதர் ஜாதவ் அறிவித்துள்ளார்.

‘டி20 உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடர்’- சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்!

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம், புனேவைச் சேர்ந்தவர் கேதர் ஜாதவ். கடந்த 2014- ஆம் ஆண்டு நடந்த இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இந்திய அணியில் இடம் பிடித்தார். அணியில் வேகப்பந்து வீச்சு, பேட்டிங் என ஆல் ரவுண்டராக கேதர் ஜாதவ் திகழ்ந்தார்.

கடந்த 2015- ஆம் ஆண்டு டி20 போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம் பிடித்த கேதர் ஜாதவ், 2017- ஆம் ஆண்டு நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 கடைசியாக விளையாடி இருந்தார். அதேபோல், கடந்த 2020- ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் பங்கேற்றிருந்தார். இதுவே அவர் இந்திய அணியில் விளையாடிய கடைசி போட்டி ஆகும். அதற்கு பிறகு அவரால் இந்திய அணியில் இடம் பிடிக்க முடியவில்லை. கேதர் ஜாதவின் மோசமான ஆட்டத்தால் இந்திய அணி மற்றும் ஐ.பி.எல்.லிம் அவரால் இடம் பிடிக்க முடியவில்லை. குறிப்பாக, ஐ.பி.எல். ஏலத்தில் குறைந்தபட்ச விலைக்கு கூட அவர் ஏலம் எடுக்கப்படவில்லை.

இதன் காரணமாக, ஒருநாள், டி20 உள்பட அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வுப் பெறுவதாக கேதர் ஜாதவ் அறிவித்திருப்பது அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. எனினும், இவர் ஒரு டெஸ்ட் போட்டியில் கூட இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

“கமல்ஹாசனும், சங்கரும் இந்திய சினிமாவின் பெருமைகள்”- மாதம்பட்டி ரங்கராஜ் புகழாரம்!

73 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடிய கேதர் ஜாதவ், 1,389 ரன்களையும், 9 டி20 போட்டிகளில் விளையாடி 122 ரன்களையும், 95 ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடி 1,208 ரன்களையும் குவித்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மொத்தம் 27 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

முன்னதாக, தினேஷ் கார்த்திக் ஓய்வை அறிவித்திருந்த நிலையில், ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் மற்றொரு வீரர் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது ரசிகர்களை கடும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.