திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக ஜொலிக்கும் பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்டோர் நடிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கல்கி 2898 AD’. நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
தோனியின் சாதனையை முறியடித்த ‘ஹிட்மேன்’!
இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் இந்திய சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் ஜூன் 27- ஆம் தேதி அன்று ‘கல்கி 2898 AD’ திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், படத்தின் ட்ரெய்லர் வரும் ஜூன் 10- ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் ரூபாய் 600 கோடி செலவில் உருவாகியுள்ள இப்படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள கார் அனைவரையும் கவர்ந்துள்ளது. இந்த காரை சென்னையில் உள்ள மஹிந்திரா குழுமமும் மற்றும் கோவையைச் சேர்ந்த ஜெயம் ஆட்டோமோட்டிவ் நிறுவனமும் இணைந்து தயாரித்திருந்தனர்.
ஹர்திக் பாண்டியா, பும்ராவின் அபார பந்து வீச்சால் வீழ்ந்தது அயர்லாந்து அணி!
ட்ரெய்லர் வெளியாகும் தேதி அறிவிப்பால் பிரபாஸ் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். குறிப்பாக, பான் படமாக உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.