தோனியின் சாதனையை முறியடித்த ‘ஹிட்மேன்’!

தோனியின் சாதனையை முறியடித்த 'ஹிட்மேன்'!

 

தோனியின் சாதனையை முறியடித்து அசத்தியுள்ளார் இந்திய அணியின் அதிரடி வீரரும், அணியின் கேப்டனுமான ரோஹித் சர்மா.

“சந்தோஷமாக தான் பிரிந்தோம்….நான் சினிமாவிற்கு வந்ததற்கு காரணம் யார்?”- நடிகை நளினி விளக்கம்!

ஐ.சி.சி.யின் டி20 உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. நியூயார்க் மைதானத்தில் நடந்த நேற்றைய கிரிக்கெட் போட்டியில், அயர்லாந்து அணியை இந்திய அணி எதிர்கொண்டது. இந்திய அணி வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த அயர்லாந்து அணி, 96 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

தோனியின் சாதனையை முறியடித்த 'ஹிட்மேன்'!

பின்னர் விளையாடிய இந்திய அணி 12.2 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை எட்டி, வெற்றி கணக்கைத் தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளைக் குவித்த இந்திய அணியின் கேப்டன் என்ற தோனியின் சாதனையை முறியடித்தார் ரோஹித் சர்மா.

‘கிங் மேக்கர்கள்’ ஆதரவு யாருக்கு?- மீண்டும் மோடி ஆட்சியா? இந்தியா கூட்டணி ஆட்சியா?

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தி 41 வெற்றிகளை தோனி பதிவுச் செய்திருந்த நிலையில், தற்போதைய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 42 வெற்றிகளை பதிவுச் செய்து அசத்தியுள்ளார்.

சாதனை பதிவுச் செய்த ரோஹித் சர்மாவுக்கு கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.