ஷாருக்கானுக்கே ‘No’ சொன்ன பிரபலம்….யார் தெரியுமா?

ஷாருக்கானுக்கே 'No' சொன்ன பிரபலம்....யார் தெரியுமா?

 

தனியார் தொலைக்காட்சிக்கு சன் டிவி புகழ் பெப்சி உமா சிறப்பு நேர்காணல் அளித்தார். அதில் தன்னுடைய பணி அனுபவங்கள், சினிமாவில் தன்னை தேடி வந்த வாய்ப்புகள் குறித்து விரிவாக விளக்கினார்.

“கமல்ஹாசனும், சங்கரும் இந்திய சினிமாவின் பெருமைகள்”- மாதம்பட்டி ரங்கராஜ் புகழாரம்!

அதில் பெப்சி உமா கூறியதாவது, “ஷாருக்கானுடன் ஹீரோயினாக நடிப்பதற்கு எனக்கு வாய்ப்பு வந்தது; ஆனால் அதற்கு நான் ‘No’ சொல்லிவிட்டேன். அதேபோல், நடிகர் ரஜினிகாந்த், சல்மான்கான் ஆகியோருடன் கதாநாயகியாக நடிப்பதற்கும் ‘No’ சொல்லிவிட்டேன். ரஜினி சார் ஒரு நாள் போன் பண்ணி நான் விருந்தினரை கூட பார்ப்பதில்லை; என் கண் உங்கள் பக்கம் தான் திரும்புகிறது எனத் தெரிவித்தார்.

நடிப்பு என்றால் ஒரு பேஷன் வேண்டும்; ஏனோ தானோ என்று தான் நடிக்க வேண்டும் என்று ரீதியில் நான் கிடையாது. எனக்கு பொறுமையே கிடையாது. நான் நடிகையாக வேண்டும் என்று நினைக்கவில்லை. என் ரத்தத்திலேயே நடிகை என்பது கிடையாது. மேக்கப் போட்டுக் கொண்டு நடிகருடன் ரோமன்ஸ் ஆக நடிப்பது காமெடி அல்ல” எனத் தெரிவித்துள்ளார்.

‘கிங் மேக்கர்கள்’ ஆதரவு யாருக்கு?- மீண்டும் மோடி ஆட்சியா? இந்தியா கூட்டணி ஆட்சியா?

2000- ஆம் ஆண்டு காலகட்டத்தில் சன் டிவியில் பெப்சி உமாவின் நிகழ்ச்சி பிரபலமானது. பெப்சி உமாவுக்கு இன்றளவும் ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.