‘கிங் மேக்கர்கள்’ ஆதரவு யாருக்கு?- மீண்டும் மோடி ஆட்சியா? இந்தியா கூட்டணி ஆட்சியா?

'கிங் மேக்கர்கள்' ஆதரவு யாருக்கு?- மீண்டும் மோடி ஆட்சியா? இந்தியா கூட்டணி ஆட்சியா?

 

மொத்தம் 543 மக்களவைத் தொகுதிகளை கொண்ட நாடாளுமன்ற மக்களவையில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 291 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது. நடந்து முடிந்த 18- வது மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. மட்டும் மொத்தம் 296 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில் 240 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

“கடினமான சமயங்களில் ஓடி ஒளிய மாட்டேன்”- கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா ஓபன் டாக்!

ஆட்சி அமைக்கத் தேவையான 272 தொகுதிகளில் எந்த கட்சியும் வெற்றி பெறாததால் கூட்டணி ஆட்சி அமைகிறது. தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் கூட்டணி துணையுடன் பா.ஜ.க. மீண்டும் ஆட்சியமைக்கவுள்ளது. 2014, 2019 ஆம் ஆண்டை தொடர்ந்து 2024- ளிலும் பா.ஜ.க. மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்க்கட்சியான ‘இந்தியா கூட்டணி’ நாடு முழுவதும் 234 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 99 தொகுதிகளிலும், சமாஜ்வாதி 39 தொகுதிகளிலும், திரிணாமூல் காங்கிரஸ் 29 தொகுதிகளிலும், தி.மு.க. 21 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

கடந்த தேர்தலில் பா.ஜ.க. மட்டும் 303 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் தற்போது 239 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், டெல்லியில் பா.ஜ.க. தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டமும், காங்கிரஸ் கூட்டணி கூட்டமும் இன்று (ஜூன் 05) மாலை 05.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்திய அணியை வீழ்த்தி வரலாறு படைக்குமா அயர்லாந்து அணி?

இந்தியா கூட்டணியால் ஆட்சியமைக்க முடியுமா?

பா.ஜ.க.வுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் இந்தியா கூட்டணி முன் இருக்கும் சில வாய்ப்புகள் என்ன என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம். ஆட்சி அமைக்க 272 இடங்கள் தேவைப்படும் நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியை இந்தியா கூட்டணி உடைத்தாக வேண்டும். தெலுங்கு தேசம், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சேர்த்து மொத்தம் 32 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.

'கிங் மேக்கர்கள்' ஆதரவு யாருக்கு?- மீண்டும் மோடி ஆட்சியா? இந்தியா கூட்டணி ஆட்சியா?

தெலுங்கு தேசம் கூட்டணி 18 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் கட்சி 12 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. 32 தொகுதிகளை வைத்துள்ள 3 கட்சிகளையும் இந்தியா கூட்டணியில் இணைக்க காங்கிரஸ் முயற்சி மேற்கொண்டு வருகிறது.

எனினும், கூட்டணி கட்சிகள் பா.ஜ.க.வுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டால் பிரதமர் மோடி மீண்டும் பிரதமராவதைத் தடுக்க முடியாது. அதேபோல், நவீன் பட்நாயக், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா ஆகிய கட்சிகளை இந்தியா கூட்டணி இழுக்க முயற்சி செய்து வருகிறது.

ஆட்சியமைப்பது யார் என்பது இன்று மாலைக்குள் தெரிந்துவிடும். அதேபோல், நாட்டின் அடுத்த பிரதமர் யார் என்பதும் தெரிந்துவிடும்.

இதனிடையே, சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் ஆகியோர் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி கூட்டத்தில் பங்கேற்பதாக திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.