நாளை வெளியாக உள்ள தமிழ் திரைப்படங்கள் என்னென்ன?- விரிவாகப் பார்ப்போம்!

நாளை வெளியாக உள்ள தமிழ் திரைப்படங்கள் என்னென்ன?- விரிவாகப் பார்ப்போம்!

 

நாளை (ஜூன் 07) திரையரங்குகளில் வெளியாக உள்ள தமிழ் திரைப்படங்கள் என்னென்ன? என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்!

தோனியின் சாதனையை முறியடித்த ‘ஹிட்மேன்’!

விதார்த், வாணிபோஜன் நடிப்பில் உருவாகியுள்ள ‘அஞ்சாமை’, வசந்த் ரவி, சத்யராஜ் நடிப்பில் உருவாகியுள்ள ‘வெப்பன்’, பழம்பெரும் நடிகர் மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஹரா’ மற்றும் தண்டுபாளையம், இனி ஒரு காதல் செய்வோம், நிஷா ஆகிய 6 திரைப்படங்கள் நாளை (ஜூன் 07) உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளன.

ஒரே நாளில் 6 தமிழ் திரைப்படங்கள் வெளியாக உள்ளதால், சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. குறிப்பாக, பிரபலங்களின் திரைப்படங்களும் அதில் இடம் பெற்றுள்ளது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. காதல், குடும்பம், ஆக்ஷன் உள்ளிட்ட கதைகள் மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு படத்திலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

‘கல்கி 2898 AD’ குறித்து படக்குழு அதிரடி அறிவிப்பு…..ரசிகர்கள் உற்சாகம்!

ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அன்று புதுப்புது திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன என்பது நினைவுக்கூறத்தக்கது.