சண்டிகர் விமான நிலையத்தில் பா.ஜ.க. எம்.பி. கங்கனா ரனாவத்தைத் தாக்கியதாக பெண் காவலர் மீது புகார் எழுந்த நிலையில், அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
“சந்தோஷமாக தான் பிரிந்தோம்….நான் சினிமாவிற்கு வந்ததற்கு காரணம் யார்?”- நடிகை நளினி விளக்கம்!
டெல்லிக்கு செல்வதற்காக பா.ஜ.க. எம்.பி.யும், நடிகையுமான கங்கனா ரனாவத், சண்டிகர் விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது, தன்னை பரிசோதனை செய்த சிஐஎஸ்எஃப் பெண் காவலர் ஒருவர் தன்னை தாக்கியதாக கங்கனா ரனாவத் பரபரப்பு புகாரை அளித்திருந்தார்.
இது குறித்து வழக்குப்பதிவுச் செய்துள்ள சண்டிகர் விமான நிலைய காவல்துறை, உண்மையில் கங்கனா ரனாவத் மீது தாக்குதல் நடத்தப்பட்டதா என விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனிடையே, குற்றச்சாட்டுக்கு உள்ளான பெண் காவலர் தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பெண் காவலர் குறித்து சிஐஎஸ்எஃப் தரப்பில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோவை வெளியிட்டுள்ள கங்கனா ரனாவத், விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பெண் காவலர் தன்னை தாக்கியதாகக் கூறியுள்ளார்.
நாளை வெளியாக உள்ள தமிழ் திரைப்படங்கள் என்னென்ன?- விரிவாகப் பார்ப்போம்!
மேலும், எனக்கு பல்வேறு ஊடகங்களில் இருந்து அழைப்பு வருகிறது. நான் நலமுடன் இருக்கிறேன். இது குறித்து புகார் அளித்துள்ளேன்; சமீப காலமாக பஞ்சாப்பில் தீவிரவாதிகள் அதிகரித்துள்ளனர் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
Shocking rise in terror and violence in Punjab…. pic.twitter.com/7aefpp4blQ
— Kangana Ranaut (Modi Ka Parivar) (@KanganaTeam) June 6, 2024