ஹைதராபாத் ஃபிலிம் சிட்டி தலைவர் ராமோஜி ராவ் காலமானார்!

ஹைதராபாத் ஃபிலிம் சிட்டி தலைவர் ராமோஜி ராவ் காலமானார்!

 

ஈ நாடு அமைப்புகளின் தலைவரும், ஹைதராபாத் ஃபிலிம் சிட்டியின் நிறுவனருமான ராமோஜி ராவ் (வயது 87) காலமானார். ஹைதராபாத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த ராமோஜி ராவ் அதிகாலையில் காலமானார்.

“என்னுடைய முதல் படமான கோகிலா முதல் தற்போது வெளியாகியுள்ள ‘ஹரா’ வரை…..”- நடிகர் மோகன் மகிழ்ச்சி!

ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் பாகுபலி, RRR, மகதீரா பிரம்மாண்ட படங்கள் படமாக்கப்பட்டுள்ளன. ஈ நாடு பத்திரிகை குழுமம், டால்பின்ஸ் ஹோட்டல், மார்கதர்சி நிதி நிறுவனத்தைத் தொடங்கியவர் ராமோஜி ராவ். சினிமா, கல்வி, பத்திரிகை என பல்துறை வித்தகரான ராமோஜி ராவுக்கு கடந்த 2016- ஆம் ஆண்டு பத்மபூஷன் விருதை வழங்கி மத்திய அரசு கௌரவித்தது.

‘அரண்மனை 4’ திரைப்படம் வசூலித்த தொகை எவ்வளவு தெரியுமா?…ஓடிடியில் எப்போது வெளியாகும்?- வெளியான அதிரடி அறிவிப்பு!

ராமோஜி ராவ் மறைவுக்கு தெலுங்கு திரையுலகினர், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பலரும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து வருகின்றனர்.