டி20 உலகக்கோப்பைக் கிரிக்கெட் லீக் சுற்றில் ஆப்கானிஸ்தான் அணியிடம் நியூசிலாந்து அணி படுதோல்வி அடைந்தது.
ஹைதராபாத் ஃபிலிம் சிட்டி தலைவர் ராமோஜி ராவ் காலமானார்!
அமெரிக்காவில் நடைபெற்ற போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியிடம் 85 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி தோல்வி அடைந்தது. முதலில் பேட்டிங்கைத் தேர்வுச் செய்து விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்களை சேர்த்தது. அந்த அணி தரப்பில் அதிகபட்சமாக குர்பாஸ் 80, இப்ராஹிம் ஸத்ரான் 44 ரன்களை சேர்த்தனர்.
160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நியூசிலாந்து அணி 15.2 ஓவர்களில் 75 ரன்களில் ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து அணியில் இரு வீரர்கள் மட்டுமே இரட்டை இலக்கத்தில் ரன்கள் சேர்த்தனர்; மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
ஆப்கானிஸ்தான் அணி தரப்பில் ஃபசல்ஹக் ஃபரூகி, ரஷீத் கான் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.