தொடர் தோல்வி…..வெற்றிக்காக ஏங்கும் இலங்கை அணி….டி20 உலகக்கோப்பையில் அடுத்த சுவாரஸ்யம்!

தொடர் தோல்வி.....வெற்றிக்காக ஏங்கும் இலங்கை அணி....டி20 உலகக்கோப்பையில் அடுத்த சுவாரஸ்யம்!

 

தொடர் தோல்வியால் இலங்கை அணி வெற்றிகாக ஏங்குகிறது. டி20 உலகக்கோப்பையில் மேலும் ஒரு சுவாரஸ்யம் நிகழ்ந்துள்ளது.

“விஜயே எனக்கு வாய்ப்பு கொடுக்கலைங்க…”- நடிகை வனிதா ஆதங்கம்!

டி20 உலகக்கோப்பைத் தொடரின் லீக் சுற்றில் நடந்த பரபரப்பான கிரிக்கெட் போட்டியில் வங்கதேசம் அணி த்ரில் வெற்றி பெற்றது. அமெரிக்காவின் டல்லாஸில் நடைபெற்ற போட்டியில் வங்கதேசம் அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

டல்லாஸில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 124 ரன்களைச் சேர்த்தது. இலங்கை அணியில் அதிகபட்சமாக நிசான்கர் 47, தனஞ்செய் டி சில்வா 21, அசலன்கா 19 ரன்களை சேர்த்தனர். வங்கதேசம் அணி தரப்பில் ரிஷாத், முஸ்தாபிசுர் ரஹ்மான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

ஹைதராபாத் ஃபிலிம் சிட்டி தலைவர் ராமோஜி ராவ் காலமானார்!

வங்கதேசம் அணியில் அதிகபட்சமாக ஹ்ரிதய் 40, லிட்டன் தாஸ் 36 ரன்களை சேர்த்து அணியின் வெற்றிக்கு வித்திட்டனர். தொடர்ந்து தோல்வியைச் சந்தித்து வரும் இலங்கை அணி வெற்றிக்காக ஏங்கியுள்ளது. குறிப்பாக, டி20 உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில் முன்னணி அணிகளை கத்துக்குட்டி அணிகள் வீழ்த்தி வருகின்றன. பாகிஸ்தானை அமெரிக்காவும், நியூசிலாந்தை ஆப்கானிஸ்தானுக்கு வென்ற நிலையில் இலங்கை அணியை வங்கதேசம் அணி வென்றிருப்பது மேலும் ஒரு சுவாரஸ்யமாகப் பார்க்கப்படுகிறது.