“விஜயே எனக்கு வாய்ப்பு கொடுக்கலைங்க…”- நடிகை வனிதா ஆதங்கம்!

 

நடிகைகள் வனிதா, சோனியா அகர்வால் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியுள்ள ‘தண்டுப்பாளையம்’ திரைப்படம் இன்று (ஜூன் 07) தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

நாளை வெளியாக உள்ள தமிழ் திரைப்படங்கள் என்னென்ன?- விரிவாகப் பார்ப்போம்!

இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகை வனிதா, “விஜயே எனக்கு வாய்ப்பு கொடுக்கலைங்க; ஒரு தமிழ் நடிகைக்கு வாய்ப்பு கொடுக்கல; முதல்ல அத கேப்போம். மனசளவுள்ள எனது அன்பும், ஆதரவும் விஜய்க்கு எப்பவுமே இருக்கும். படத்தைப் பார்த்த வரைக்கும் நல்லா இருக்கும் என்று சொன்னீங்க. இந்த படத்தை மக்கள்கிட்ட கொண்டு போய் சேருங்க.

‘அரண்மனை 4’ திரைப்படம் வசூலித்த தொகை எவ்வளவு தெரியுமா?…ஓடிடியில் எப்போது வெளியாகும்?- வெளியான அதிரடி அறிவிப்பு!

சினிமாவ வாழ விடணும்; சினிமாவ வளர விடணும்; அப்பதான் அடுத்தடுத்த தலைமுறைக்கு வாய்ப்பு கிடைக்கும். இண்டஸ்ட்ரீஸ் நல்லா இருந்தா தான், இத நம்பியுள்ள தொழிலாளர்கள் நல்லாருக்க முடியும். இத நம்பி தான் நாங்கெல்லாம் இருக்கோம்; அதனால நீங்க தான் சப்போர்ட் பண்ணனும். எனக்கு மார்க்கெட் இருக்கும்ற நம்பிக்கை இருக்கு” எனத் தெரிவித்துள்ளார்.