“25 வருடங்களுக்கு முன்பு சென்னைக்கு வெறும் கையோட வந்த நான்……”- நடிகர் சூரி உருக்கம்!

"25 வருடங்களுக்கு முன்பு சென்னைக்கு வெறும் கையோட வந்த நான்......"- நடிகர் சூரி உருக்கம்!

 

‘கருடன்’ திரைப்படம் வெற்றியைத் தொடர்ந்து காணொளியை வெளியிட்டு நன்றி தெரிவித்துள்ளார் நடிகர் சூரி.

ஹைதராபாத் ஃபிலிம் சிட்டி தலைவர் ராமோஜி ராவ் காலமானார்!

அந்த காணொளியில் நடிகர் சூரி கூறியதாவது, “இந்த ஒருவாரக் காலத்தை நான் வாழ்க்கையில் மறக்கவே மாட்டேன்; ‘கருடன்’ திரைப்படத்தை இவ்வளவு வெற்றிப் படமாக மாற்றிய உங்களுக்கு எனது சார்பாகவும், குடும்பத்தினர் சார்பாகவும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கொண்டாடும் விதமாக படம் அமைந்திருப்பது எனக்கு பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது.

இந்த படம் சிறப்பாக வருவதற்கு கடினமாக உழைத்த படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி; அதேபோல், இந்த படத்தை எல்லோருக்கும் கொண்டு போய் சேர்த்து பத்திரிகை நண்பர்கள், ஊடகங்களுக்கும், யூ-டியூபர்ஸ்களுக்கும் நன்றி. இந்த படத்தைப் பார்த்து பாராட்டுத் தெரிவித்த அனைவரும் தனித்தனியாக நன்றிச் சொல்ல இயலவில்லை. அதனால் ஒட்டுமொத்தமாக அனைவருக்கும் இந்த காணொளி மூலம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நீங்கள் இல்லையென்றால் இவ்வளவு பெரிய படம் வெற்றி படமாக அமைத்திருக்குமா என்றால் நிச்சயம் எனக்கு தெரியவில்லை; என் நண்பர்களும், சினிமாத்துறையைச் சேர்ந்த நண்பர்களும் எனது படத்தைப் பார்த்துப் பாராட்டு தெரிவித்திருந்தார்கள், வாழ்த்து தெரிவித்திருந்தார்கள், அவர்களுக்கும் மிக்க நன்றி. என் அன்பு தம்பிகள் கொண்டாடியது எனக்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. தம்பிகளே உங்களின் கொண்டாட்டம் எனக்கு மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது.

தொடர் தோல்வி…..வெற்றிக்காக ஏங்கும் இலங்கை அணி….டி20 உலகக்கோப்பையில் அடுத்த சுவாரஸ்யம்!

25 வருடங்களுக்கு முன்பு சென்னைக்கு வெறும் கையோட வந்த சூரியை நான் இன்னும் மறக்கவில்லை. இந்த தருணம் இங்கு நான் இருப்பது; எனக்கு கிடைத்த இடம்; எல்லாமே நீங்கள் கொடுத்தது தான். உங்களை மகிழ்விக்கும் விதமாக என்னுடைய படைப்புகளை என் வாழ்நாள் முழுவதும் கொடுத்துக் கொண்டே இருப்பேன். அதற்கு முழு முயற்சி செய்வேன். மிக்க நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.