தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு ஆதரவாக கிரிக்கெட் ஜாம்பவான்கள் சரமாரி கேள்வி!

தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு ஆதரவாக கிரிக்கெட் ஜாம்பவான்கள் சரமாரி கேள்வி!

 

அமெரிக்காவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் கிரிக்கெட் வீரர் நடராஜன் இடம் பெறாதது குறித்து கிரிக்கெட் ஜாம்பவான்கள் இந்திய தேர்வுக்கு குழுவுக்கு சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர்.

தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு ஆதரவாக கிரிக்கெட் ஜாம்பவான்கள் சரமாரி கேள்வி!

“25 வருடங்களுக்கு முன்பு சென்னைக்கு வெறும் கையோட வந்த நான்……”- நடிகர் சூரி உருக்கம்!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் என்றழைக்கப்படும் ஐ.சி.சி.யின் டி20 உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் இடம் பெறாததால் கிரிக்கெட் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அத்துடன், கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களாகத் திகழும் முத்தையா முரளிதரன், ஷேன் வாட்சன் மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் பத்ரிநாத், முரளி விஜய் உள்ளிட்டோர் தமிழக வீரர் நடராஜனுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளனர். மேலும், இந்திய கிரிக்கெட் வாரிய தேர்வுக் குழுவையும் சரமாரியாக விமர்சித்துள்ளனர்.

நடந்து முடிந்த ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சிறப்பாக விளையாடிய நடராஜன், தொடர்ந்து போட்டிகளில் விக்கெட்டுகளை வீழ்த்தி, தேர்வுக் குழுவைத் தன் பக்கம் திருப்பிய நிலையிலும், தேர்வுக் குழு நடராஜனை கண்டுக் கொள்ளவில்லை.

தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு ஆதரவாக கிரிக்கெட் ஜாம்பவான்கள் சரமாரி கேள்வி!

தொடர் தோல்வி…..வெற்றிக்காக ஏங்கும் இலங்கை அணி….டி20 உலகக்கோப்பையில் அடுத்த சுவாரஸ்யம்!

குறிப்பாக, தமிழக வீரர்கள் ஒருவர் கூட டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.