இந்திய பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்பது யார்….யார்?

இந்திய பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்பது யார்....யார்?

 

இந்திய நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி, நாளை (ஜூன் 09) பதவியேற்கவுள்ள நிலையில், விழாவில் கலந்து கொள்வதற்காக பல்வேறு துறைகளில் புகழ் பெற்றவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

“25 வருடங்களுக்கு முன்பு சென்னைக்கு வெறும் கையோட வந்த நான்……”- நடிகர் சூரி உருக்கம்!

நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி நாளை (ஜூன் 09) பதவியேற்கவுள்ள நிலையில், விழாவில் கலந்து கொள்வதற்காக பல்வேறு துறைகளில் புகழ் பெற்றவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியமைக்கவுள்ளது.

இந்திய பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்பது யார்....யார்?

மூன்றாவது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கிறார். இதற்கான ஏற்பாடுகள் டெல்லியில் உள்ள குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெற்று வருவதால், அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக அண்டை நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதில் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, நேபாள பிரதமர் புஷ்பா கமல் தஹால், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, பூட்டான் பிரதமர் ஷெரிங், மொரிஷியஸ் பிரவிந்த் ஜுக்நாவுத் ஆகியோர் பிரதமர் விழாவில் கலந்து கொள்ளவுள்ளனர். அண்மை காலமாக இந்தியா மற்றும் மாலத்தீவுகளுக்கு இடையில் உரசல் ஏற்பட்டிருந்த நிலையில், பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக அந்நாட்டு அதிபருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு ஆதரவாக கிரிக்கெட் ஜாம்பவான்கள் சரமாரி கேள்வி!

இதேபோல், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், மாநில முதலமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள், உயர்நீதிமன்ற நீதிபதிகள், தூய்மை பணியாளர்கள், வந்தே பாரத், மெட்ரோ ரயில் ஊழியர்கள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோர் அழைக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இருந்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், ஜி.கே.வாசன், அன்புமணி ராமதாஸ், பாரிவேந்தர் உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.