பேட்ஸ்மேன்களை திணறடித்த பவுலர்… யார் இந்த சவுரப் நெட்ராவல்கர்?

பேட்ஸ்மேன்களை திணறடித்த பவுலர்... யார் இந்த சவுரப் நெட்ராவல்கர்?

 

பலம் வாய்ந்த பாகிஸ்தான் அணியின் பேட்டர்களை திணறடித்த அமெரிக்கா அணியைச் சேர்ந்த மும்பைக்காரர். யார் இவர்? மும்பை to அமெரிக்காவின் பின்னணி என்ன விரிவாகப் பார்க்கலாம்.

ஆப்கானிஸ்தானிடம் படுதோல்வி அடைந்தது நியூசிலாந்து அணி!

டல்லாஸ் மைதானத்தில் நடந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு அதிர்ச்சிக் கொடுத்து வெற்றி பெற்றது அமெரிக்கா. வெற்றியைத் தீர்மானிக்கும் சூப்பர் ஓவரில் பந்து வீசிய அமெரிக்க அணியின் இடதுகை பந்து வேகப்பந்து வீச்சாளர் சவுரப் நெட்ராவல்கர் முதல் பந்திலேயே டாட் செய்து அசத்தினார்.

19 ரன்கள் தேவைப்பட்டபோது, ஒரு விக்கெட் எடுத்ததுடன் 13 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து பாகிஸ்தான் அணிக்கு முதல் போட்டியிலேயே தோல்வியைப் பரிசளித்தார் சவுரவ் நெட்ராவல்கர்.

கடந்த 2010- ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை காலிறுதியில் இதே பாபர் அசாம் இடம் பெற்றிருந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான தோல்விக்கு சவுரப் நெட்ராவல்கர் பதிலடிக் கொடுத்துள்ளார். இந்தியாவின் இளம் அணிதான் பாகிஸ்தானிடம் அப்போது தோல்வியைத் தழுவியது. 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் சவுரப் இடம் பெற்றிருந்தார்.

மும்பையில் பிறந்த சவுரப், சிறு வயது முதலே கிரிக்கெட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். ஆனால் அந்த உலகக்கோப்பைத் தோல்வி, படிப்பு என அவரது கனவு தள்ளிப் போய் கொண்டே இருந்தது. மும்பையில் கணினி பொறியியலில் இளநிலை பட்டப்படிப்பை முடித்து, மேற்படிப்பிற்காக அமெரிக்கா சென்ற போது கனவை நிறைவேற்றுவதை எண்ணி விளையாடுவதை அவர் நிறுத்தவில்லை.

இந்திய பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்பது யார்….யார்?

கடின உழைப்பால் சர்வதேச போட்டியில் விளையாட அவருக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. எனினும், அது அமெரிக்கா அணியில் விளையாடுவதற்காக ஆகும். அமெரிக்கா அணிக்கு சில காலம் கேப்டனாக நீடித்த சவுரப், அந்த அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடியவர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

14 ஆண்டுகள் கழித்து பாகிஸ்தான் அணிக்கு எதிராக சிறப்பாக பந்து வீசியதன் மூலம் தாய் நாட்டில் அவரது பெயரை ஒலிக்க செய்துள்ளார். பலம் வாய்ந்த அணியை வீழ்த்துவது இதுபோன்ற சிறிய அணிகளில் பெரிய கனவுகள் மட்டுமல்ல. ஓர் அங்கீகாரம். ஜூன் 12- ஆம் தேதி இந்திய அணியை அமெரிக்கா அணி எதிர்கொள்ள இருக்கிறது னென்பது குறிப்பிடத்தக்கது.