நரேந்திர மோடி குறித்து நடிகர் ரஜினிகாந்த் சொன்னது என்ன?

நரேந்திர மோடி குறித்து நடிகர் ரஜினிகாந்த் சொன்னது என்ன?

 

நாட்டின் பிரதமராகத் தொடர்ந்து மூன்றாவது முறையாகப் பதவியேற்கவுள்ள நரேந்திர மோடி சாதனைப் படைத்துள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

பேட்ஸ்மேன்களை திணறடித்த பவுலர்… யார் இந்த சவுரப் நெட்ராவல்கர்?

நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக டெல்லி செல்லும் முன்பு சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், “நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு வலுவான எதிர்க்கட்சியை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளார்கள்; இது ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானது. தொடர்ந்து மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பதவியேற்க உள்ள நரேந்திர மோடி சாதனை படைத்துள்ளார். ஜவஹர்லால் நேருவுக்கு அடுத்தப்படியாக மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்கிறார்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்திய பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்பது யார்….யார்?

டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்றிரவு 07.15 மணிக்கு நடைபெறும் பதவியேற்பு விழாவில் தொடர்ந்து மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பதவியேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.