“நான் நினைச்ச மாதிரி வாழ்க்கை மாறல…. அங்க கனவு காணக்கூட நேரம் இருக்காது”- நடிகர் விஜய் சேதுபதி உருக்கம்!

"நான் நினைச்ச மாதிரி வாழ்க்கை மாறல.... அங்க கனவு காணக்கூட நேரம் இருக்காது"- நடிகர் விஜய் சேதுபதி உருக்கம்!

 

‘மகாராஜா’ படக்குழுவினர் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, நடிகர் விஜய் சேதுபதி, குடும்ப சூழல் காரணமாக 21 வயதில் வேலைக்காக துபாய் சென்ற கதையை உணர்ச்சிப் பொங்கப் பகிர்ந்தார்.

“25 வருடங்களுக்கு முன்பு சென்னைக்கு வெறும் கையோட வந்த நான்……”- நடிகர் சூரி உருக்கம்!

அப்போது நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்ததாவது, “இப்ப தான் துபாய்ல எல்லா இன்டெர்வியுலையும் சொன்னேன். அத நம்ம மக்கள் கிட்டயும் சந்தோஷமாகப் பகிர்ந்துக்கறன். நான் சொல்லி சொல்லி சலிச்சு போன கதையாக இருந்தாலும் உங்களுக்கு கேட்க சுவாரஸ்யமாக இருக்கும்னு நினைக்கறன். இங்கவொரு அக்கோன்டன்ட் கம்பெனியில வேலை செஞ்சுட்டு இருந்தன் சார். அதுவொரு சிமெண்ட் கம்பெனி சார். மாதம் ரூபாய் 3,500 சம்பளம் சார்.

என் பிரண்ட் சொல்லி துபாயில வேலை இருக்கு ரூபாய் 12,000 சம்பளம்னு சொன்னாங்க. என்ட அப்ப பாஸ்போர்ட் இல்ல. நான் பாஸ்போர்ட் எடுக்கறதுக்காக அப்ளே பண்ணன். நான் 10 நாள்ல ஊருக்கு போகணும். நான் ரேஷன் கார்டு, டிகிரி சர்பிகேட் எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு கமிஷனர் ஆபீஸுக்கு போனேன். அங்கு ஒரு நல்ல மனுஷன் சார். அவருட்ட குடும்ப சூழலால துபாய் போறனு சொன்னன்.

பேட்ஸ்மேன்களை திணறடித்த பவுலர்… யார் இந்த சவுரப் நெட்ராவல்கர்?

லோக்கல் ஸ்டேஷன் போக சொன்னாரு; அங்க போனேன் பாஸ்போர்ட் கிடைச்சது. துபாய் ஏர்போர்ட் போனேன். அங்க அங்க 75 வயசு படேல் என்ற தாத்தா என்ன அழைச்சுட்டு போனாரு. அப்ப எனக்கு 21 வயசு. நான் இருந்த இடம் பாலைவனத்துல மலைப்பகுதி. 6- க்கு 3 பெட்ரூம் கொடுத்தாங்க. கோயிலுக்கு போயிட்டு பெரிய ஆளா ஆகப்போறோம்னு வேண்டிக்கிட்டு, ஆபீஸ்க்கு போய் முதலாளியைப் பாத்தன். ஆன நான் நினைச்ச மாதிரி வாழ்க்கை மாறல.

நரேந்திர மோடி குறித்து நடிகர் ரஜினிகாந்த் சொன்னது என்ன?

அந்த நேரத்துல குடும்பத்துக்கு ரூபாய் 10,000 அனுப்புனன். அங்க ஒரு வெண்டிங் மெஷின் இருக்கும் காசு போட்டா கூல்டிரிங்க்ஸ் வரும். யோசிப்பன் காசு செலவு பண்லாமா, வேணாமானு. என்ன போல பலபேரோட நிலம அங்க அது தான். அங்க கொண்டாடலாம் முடியாது. வியாழக்கிழமை ஆனா எல்லாரும் ஒன்னுக்கூடி சமைச்சி சாப்பிடுவம். ரூம சுத்தம் பண்றது, பாத்ரூம் போறது, சாப்பிடறது இதுக்கு டைம் சரியா இருக்கும். அங்க கனவு காணக்கூட நேரம் இருக்காது” என உணர்ச்சிப் பொங்க தெரிவித்துள்ளார்.