இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி….ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள்….வரலாறு படைக்குமா இந்திய அணி?

இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி....ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள்....வரலாறு படைக்குமா இந்திய அணி?

 

டி20 உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி இன்று (ஜூன் 09) சந்திக்கவிருக்கிறது. நியூயார்க்கில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்றிரவு 08.00 மணிக்கு (இந்திய நேரப்படி) நடைபெறும் போட்டியில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி எதிர்கொள்கிறது.

நரேந்திர மோடி குறித்து நடிகர் ரஜினிகாந்த் சொன்னது என்ன?

இப்போட்டியை காண உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இதனிடையே, பாகிஸ்தான் அணியை வீழ்த்த கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான கிரிக்கெட் வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பான புகைப்படங்களை ஐ.சி.சி., பி.சி.சி.ஐ. சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளது. புகைப்படங்களை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி....ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள்....வரலாறு படைக்குமா இந்திய அணி?
Photo: BCCI

பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் இந்திய அணி எத்தனை வெற்றி, தோல்விகளைப் பெற்றுள்ளது என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்! சர்வதேச ஒருநாள் போட்டிகளில் மொத்தம் 135 போட்டிகளில் பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டுள்ள இந்திய அணி 57- ல் வெற்றி பெற்றுள்ளது; பாகிஸ்தான் அணி 73 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 5 போட்டிகளுக்கு முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.

பேட்ஸ்மேன்களை திணறடித்த பவுலர்… யார் இந்த சவுரப் நெட்ராவல்கர்?

12 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி 9- ல் வெற்றி பெற்றுள்ளது; பாகிஸ்தான் அணி 3- ல் தோல்வி அடைந்துள்ளது. ஒருநாள், டெஸ்ட், டி20 என மொத்தம் 206 போட்டிகளில் பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டுள்ள இந்திய அணி 74- ல் வெற்றியும், பாகிஸ்தான் அணி 88-ல் வெற்றியும், 44 போட்டிகள் டையில் முடிந்துள்ளது.

இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் பாகிஸ்தானை அதிக டி20 போட்டிகளில் வீழ்த்திய அணி என்ற பெருமையைப் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.