இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியின் highlights வீடியோ.

 

 

டி20 உலகக்கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்றுள்ளது. நியூயார்க்கில் நேற்று (ஜூன் 09) நடைபெற்ற போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 19 ஓவர்களில் ஆல்-அவுட் ஆகி வெறும் 119 ரன்கள் மட்டுமே எடுத்தது. 120 என்ற இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 113 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் ரிஷப் பண்ட் 42 ரன்களும் மற்றும் பும்ரா 3, ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.

பாகிஸ்தான் அணி தரப்பில் ரிஷ்வான் 31 ரன்களும், நசீம் ஷா 3, ஹரிஸ் ரவுஃப் 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர். ஆட்ட நாயகன் விருதை பும்ரா பெற்றார்.

நடப்பு டி20 உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில் தொடர்ந்து இரண்டாவது வெற்றியை இந்திய அணி பதிவுச் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.