‘காஞ்சனா 4’ திரைப்படம் குறித்து சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்திக்கு நடிகரும், இயக்குநருமான ராகவா லாரன்ஸ் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
‘காஞ்சனா 4’ திரைப்படத்தில் நடிக்கவிருக்கும் நடிகைகள் குறித்து சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியான நிலையில், அது வதந்தி என்று நடிகர் ராகவா லாரன்ஸ் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
நரேந்திர மோடி குறித்து நடிகர் ரஜினிகாந்த் சொன்னது என்ன?
இது குறித்து நடிகரும், நடன இயக்குநருமான ராகவா லாரன்ஸ், “நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் வணக்கம், ‘காஞ்சனா 4’ மற்றும் நடிகர், நடிகைகள் குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்கள் அனைத்தும் வெறும் வதந்திகள். ராகவேந்திரா புரொடக்ஷன் மூலம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். விரைவில்!” என்று குறிப்பிட்டுள்ளார்.