டி20 உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் நியூயார்க்கில் நடந்த நேற்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய த்ரில் வெற்றி பெற்றது. பாபர் அசாம், முகமது ரிஸ்வான், இஃப்திகார் அகமது என பாகிஸ்தான் அணியின் முக்கிய பேட்டர்களின் விக்கெட்டை வீழ்த்தி அசத்திய பும்ரா, அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியின் highlights வீடியோ.
மேலும் பும்ரா ஆட்டநாயகன் விருதையும் வென்றுள்ளார். பாகிஸ்தான் அணி உடனான போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி புதிய வரலாற்று சாதனையைப் படைத்துள்ளது. சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி ‘DEFEND’ செய்த குறைந்தபட்ச ஸ்கோர் இதுவாகும். அதேபோல், டி20 உலகக்கோப்பை வரலாற்றில் குறிப்பிட்ட ஒரு அணிக்கு எதிராக அதிக வெற்றிகளைக் குவித்த அணி என்ற சாதனையைப் படைத்துள்ளது இந்திய அணி.
தோல்வி குறித்து பேசிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம், “இந்தியாவுக்கு எதிரான போட்டியில் நன்றாகவே பந்து வீசினோம். பேட்டிங்கில் முதல் 6 ஓவர்களை நன்றாக பயன்படுத்த வேண்டும் என நினைத்தோம். அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் சிக்ஸர்கள் அடிப்படை நிறுத்திவிட்டு 1-2 என ரன்களை சேர்க்க முயன்றோம்.
சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் ராகவா லாரன்ஸ்!
பின்வரிசை பேட்டர்களிடம் இருந்து அதிகம் எதிர்பார்க்க முடியாது. தவறுகளைக் களைந்து அடுத்த 2 போட்டிகளில் சிறப்பாக ஆடுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.