நடிகர் சுரேஷ் கோபியின் அதிரடி பேட்டியால் பரபரப்பு!

நடிகர் சுரேஷ் கோபியின் அதிரடி பேட்டியால் பரபரப்பு!

 

மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தன்னை விடுவிக்குமாறு நடிகர் சுரேஷ் கோபி எம்.பி. வேண்டுகோள் விடுத்திருப்பதால் பா.ஜ.க. தலைமை அதிர்ச்சியடைந்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் ராகவா லாரன்ஸ்!

கேரளா மாநிலம், திருச்சூரில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட நடிகர் சுரேஷ் கோபி வெற்றி பெற்றதன் மூலம் அம்மாநிலத்தில் முதல்முறையாக கால் பதித்தது பா.ஜ.க. இதையடுத்து, மத்திய இணையமைச்சராக சுரேஷ் கோபி பதவியேற்றுக் கொண்டார்.

இந்த சூழலில், மலையாள செய்தி சேனல்களுக்கு பேட்டியளித்துள்ள மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி, “சினிமாவில் நடிக்கவிருப்பதால் அமைச்சர் பதவி வேண்டாம் எனக் கூறினேன். மத்திய அமைச்சர் பதவியில் இருந்து என்னை விடுவிப்பார்கள் என நம்புகிறேன். அமைச்சர் பதவி வேண்டாம் என முன்பே கூறினேன்; ஆனால் பா.ஜ.க. தலைமைக் கேட்டுக் கொண்டதால் மறுக்கவில்லை.

ஒரு எம்.பி.யாக இருந்து திருச்சூர் மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவேன்” எனத் தெரிவித்துள்ளார்.

புதிய வரலாறு படைத்த இந்திய அணி…….தோல்வி குறித்து மனம் திறந்த பாபர் அசாம்!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று (ஜூன் 10) மாலை 05.00 மணிக்கு புதிய மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், நடிகர் சுரேஷ் கோபியின் பேட்டியால் பா.ஜ.க.வின் தேசிய தலைமை அதிர்ச்சி அடைந்துள்ளது. அத்துடன், அமைச்சர்களாகப் பொறுப்பேற்றவர்களுக்கு இன்னும் சில மணி நேரத்தில் இலாக்காக்கள் குறித்த அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில் டெல்லி வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.