பிரதமர் நரேந்திர மோடியின் முதல் கையெழுத்து!

பிரதமர் நரேந்திர மோடியின் முதல் கையெழுத்து எதற்கு தெரியுமா?

 

தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக நரேந்திர மோடி, நேற்று (ஜூன் 09) பதவியேற்றுக் கொண்டார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த பதவியேற்பு விழாவில், நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அத்துடன், பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையும் பதவியேற்றுக் கொண்டது.

புதிய வரலாறு படைத்த இந்திய அணி…….தோல்வி குறித்து மனம் திறந்த பாபர் அசாம்!

பிரதமர் நரேந்திர மோடி உள்பட மொத்தம் 72 பேர் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர். இதையடுத்து, டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி, முறைப்படி பதவியேற்றுக் கொண்டார். அலுவலகத்திற்கு வந்த பிரதமர் மோடியை அதிகாரிகள் கைத்தட்டி வரவேற்றனர்.

பிரதமராகப் பதவியேற்ற பின் விவசாயிகள் தொடர்பான முதல் கோப்பில் நரேந்திர மோடி கையெழுத்திட்டார். பிரதம மந்திரி கிசான் நிதியின் 17ஆவது தவணையை வெளியிடுவதற்கான கோப்பில் கையெழுத்திட்டார். 9.3 கோடி விவசாயிகள் பயன்பெறும் திட்டத்திற்கு ரூபாய் 20,000 கோடி நிதியை விடுவிக்க பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

நடிகர் சுரேஷ் கோபியின் அதிரடி பேட்டியால் பரபரப்பு!

புதிய அரசின் முதல் முடிவு விவசாயிகளின் நலனுக்கான அரசின் அர்ப்பணிப்பைக் காட்டுகிறது. விவசாயிகளின் வாழ்வுக்காக எங்கள் அரசு முழு அர்ப்பணிப்புடன் உள்ளது. வருங்காலங்களில் விவசாயிகள், விவசாயத் துறைக்காக இன்னும் அதிகம் உழைக்க விரும்புகிறோம் என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.