டி20 உலகக்கோப்பை- சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய முதல் அணி எது தெரியுமா?

டி20 உலகக்கோப்பை- சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய முதல் அணி எது தெரியுமா?

 

டி20 உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில் வங்கதேசம் அணிக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி போராடி வெற்றி பெற்றது.

பிரதமர் நரேந்திர மோடியின் முதல் கையெழுத்து!

நியூயார்க்கில் நடந்த டி20 உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் 21 லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா- வங்கதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங்கைத் தேர்வுச் செய்து விளையாடியது. தொடக்கம் முதல் வங்கதேச வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தென்னாப்பிரிக்கா அணியினர் திணறினர்.

முன்னணி பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் வெளியேற கிளாசன்- டேவிட் மில்லர் ஜோடி பொறுமையுடன் விளையாடியது. இறுதியில் தென்னாப்பிரிக்கா அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 113 ரன்களை மட்டுமே எடுத்தது. எளிய இலக்குடன் விளையாடிய வங்கதேசம் அணியினர், தென்னாப்பிரிக்கா அணியின் பந்து வீச்ச்சாளர்களை சமாளிக்க முடியாமல் திணறினர்.

எனினும், அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிக்கொடுத்த அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 109 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலமாக தென்னாப்பிரிக்கா அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. தென்னாப்பிரிக்கா அணி தரப்பில் கேசவ் மகாராஜ் 3 விக்கெட்டுகளையும், ரபாடா, ஆன்ட்ரிச் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

“தேவயானி கிளாமராக நடித்ததில்லையா?”- பயில்வானை விளாசிய ஷகிலா!

இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், ஐ.சி.சி.யின் டி20 உலகக்கோப்பை தொடரில் முதல் அணியாக சூப்பர்-8 சுற்றுக்கு முன்னேறியது தென்னப்பிரிக்கா அணி! இதனால் அந்த அணியினர் உற்சாகமடைந்துள்ளனர்.